மாகாண சபைத் தேர்தல் முறைமை: அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கோரிய தெரிவுக்குழு
மாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் முறைமையை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, பல்வேறு அரசியல் கட்சிகளிடம் தமது கருத்துகளையும் முன்மொழிவுகளையும் கோரியுள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தெரிவுக்குழுக் கூட்டத்தில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான பொருத்தமான தேர்தல் முறைமை குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் தமது முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தனர்.
தேர்தல் முறைமை
பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான முனீர் முலாபர், சட்டத்தரணி சுனில் வட்டகல, அருண் ஹேமச்சந்திர உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.