மாகாண சபைத் தேர்தல் முறைமையில் அரசு இழுபறி! ஹரின் பெர்னாண்டோ குற்றச்சாட்டு
மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக அரசு மேலும் காலத்தை இழுத்தடிக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப செயலாளர் ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபை தேர்தல் குறித்து மக்களின் விருப்பம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு புதிய முறைமையா அல்லது பழைய முறைமையா என்பது குறித்துத் தெரிவுக்குழுவை அமைத்து விவாதிப்பது தேவையற்ற காலதாமதத்தையே ஏற்படுத்தும்.

இவ்வாறான பொறிமுறையின் ஊடாகத் தேர்தலை மேலும் தள்ளிப்போட அரசு முயற்சிப்பதாகவே மக்கள் கருதுகின்றனர்.
மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், நிலுவையிலுள்ள மாகாண சபைத் தேர்தலை இந்த வருடமே நடத்துவதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இதற்கான சட்டச் சிக்கல்கள் இருப்பின், அவற்றை விரைவாகத் தீர்த்துத் தேர்தலுக்கான சூழலை உருவாக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam