மாற்றுத் தீர்வு எட்டப்படும் வரும் வரைமாகாண சபை முறைமை நீக்கப்படாது : ரில்வின் சில்வா
இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு மாற்றுத் தீர்வைக் கண்டுபிடிக்கும் வரை மாகாண சபை முறைமை நீக்கப்படமாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனப்பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வை உருவாக்க வேண்டும் என்பதை எமது தேர்தல் அறிக்கையிலேயே நாம் உறுதியளித்திருந்தோம். மாகாண சபைகள் அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற உதவவில்லை என்பது எமது கருத்து. எவ்வாறாயினும், ஒரு சிறந்த மாற்றுத் தீர்வைத் தேடும் வரை மாகாண சபைகள் அவ்வாறே இருக்கும்.
மாகாண சபைத் தேர்தல்
முறையான மாற்றுத் தீர்வொன்றை எட்டாமல் அவற்றை நாம் அகற்றப்போவதில்லை. ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டச் சிக்கல் காரணமாகவே மாகாண சபைகளை தற்போது இயக்க முடியாத சூழல் காணப்படுகிறது.
இந்த ஆண்டில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த நாம் திட்டமிட்டிருந்த போதிலும், 'டித்வா' புயல் அனர்த்த காரணங்களால் அது சாத்தியப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதனை எவ்வாறு நடத்துவது என்பதே தற்போதைய கேள்வி. தேர்தலை நடத்துவதற்குத் தடையாக உள்ள சட்டச் சிக்கல்கள் நீக்கப்பட வேண்டும். அத்துடன் எல்லை நிர்ணயம் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
எல்லை நிர்ணய நடவடிக்கைகளை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. இது குறித்து விரிவாக ஆராய்வதற்காக தற்போது ஒரு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri