மாகாண சபைத் தேர்தல் தாமதம்: தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட தகவல்

Election Commission of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Rakesh Jan 26, 2026 07:51 AM GMT
Report

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், நடைமுறையில் காணப்படும் சட்டச் சிக்கலுக்குத் தீர்வு கண்டால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் நடவடிக்கைகளுக்கு தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

நாமல் ராஜபக்சவுக்கு இந்திய குடியரசு தின நிகழ்வில் சிறப்பு கௌரவம்

நாமல் ராஜபக்சவுக்கு இந்திய குடியரசு தின நிகழ்வில் சிறப்பு கௌரவம்

நாடாளுமன்றத்தில் தீர்வு

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கலினால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தல் தாமதம்: தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட தகவல் | Provincial Council Election

மாகாண சபைத் தேர்தலில் காணப்படும் சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்குக் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட குழுக்களுக்குப் பல யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். தேர்தல் சட்டத்தில் உள்ள சிக்கலுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானமளித்துள்ளது.

ஆகவே, இந்த விடயத்தில் நாடாளுமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். அத்துடன், மாகாண சபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறையிலோ அல்லது புதிய தேர்தல் முறையிலோ நடத்த வேண்டும் என்று அரசியல் தரப்பில் குறிப்பிடப்படுவதை அவதானிக்க முடிகின்றது. 

 மாகாணசபை தேர்வு

கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அதிக கரிசணை கொள்ளப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்கு 12 பேரை உள்ளடக்கிய குழு ஒன்றை நியமிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது ஒரு சிறந்த தீர்மானமாகும்.

மாகாண சபைத் தேர்தல் தாமதம்: தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட தகவல் | Provincial Council Election

மேலும், நாடாளுமன்ற உத்தேச தெரிவுக்குழுவில் முன்னிலையாகி தேர்தல் முறைமை தொடர்பிலும், மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்த யோசனைகளை முன்வைக்கவுள்ளோம்.

இந்தக் குழு ஊடாக ஒரு தீர்வு எட்டப்பட்டால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தலாம். தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கலுக்குத் தீர்வு கண்டால் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வோம். மாகாண சபைத் தேர்தலுக்காக இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

திடீர் இடைநீக்கம்.. அநுர அரசிற்கு ஏற்படப் போகும் புதிய நெருக்கடி

திடீர் இடைநீக்கம்.. அநுர அரசிற்கு ஏற்படப் போகும் புதிய நெருக்கடி

பிரதி அமைச்சரின் பெயரில் நடக்கும் பாரிய மோசடி

பிரதி அமைச்சரின் பெயரில் நடக்கும் பாரிய மோசடி

11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US