நாமல் ராஜபக்சவுக்கு இந்திய குடியரசு தின நிகழ்வில் சிறப்பு கௌரவம்
ஒடிசாவிலுள்ள கேஐஐடி (KIIT University, Odisha) பல்கலைக்கழத்தில் நடைபெற்ற இந்திய குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாமல் ராஜபக்சவுக்கு சிறப்பான கௌரவம் அளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
வழங்கப்பட்ட கௌரவம்
பல்கலைக்கழக நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் மற்றும் பொற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.தேசிய கொடி ஏற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட நாமல் ராஜபக்ச திறந்த வாகனத்தில் பொது மக்கள் பார்வைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அதன் பின்னர் நூற்றுக் கணக்கான பார்வையாளர்கள் மத்தில் ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினார். ஆனால் இந்திய குடியரசு தின நிகழ்வுக்கு நாமல் ராஜபக்ச எம்.பிக்கு இந்திய அரசாங்கத்தில் எவ்வித இராஜதந்திர அழைப்பும் விடுக்கப்படவில்லை.
இந்த பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சித்ரல் பெர்னாண்டோ, சாமித்ரினி கிரியெல்ல, சதுரா கலப்பட்டி மற்றும் பிரசாத் சிறிவர்தன, முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திகா அனுருத்த, சஞ்சீவ எதிரிமன்ன, சம்பத் அதுகோரல மற்றும் இலங்கை பொதுஜன பெரமுன அரசியல் குழு உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரும் சென்றிருந்தனர்.






சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri