இந்திய துணைத் தூதரகத்தால் மனிதாபிமான உதவிகள் வழங்கி வைப்பு
ஈதுல் ஃபித்ர் தினத்தை முன்னிட்டு இந்திய தூதரகத்தால் 150 ஏழை குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வானது நேற்று (09.04.2024) யாழ்ப்பாண கலாசார மையத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் இந்திய துணை தூதுவர் சாய் முரளி (Sai Murali), மக்கள் செயலகத்தின் தலைவர் மௌலவி சுபியான் மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
எதிர்கால வாய்ப்பு
இதன்போது உரையாற்றிய இந்திய துணை தூதுவர் இந்திய (India) அரசாங்கத்தின் இத்தகைய மனிதாபிமான உதவிகள் இரு நாட்டு மக்களுக்கும் இடையே நெருங்கிய உறவுகளை வளர்க்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பங்கேற்பாளர்களுக்கு ரமழான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு, யாழ் கலாசார மையத்தின் விரிவான சுற்றுப்பயணத்திற்கான எதிர்கால வாய்ப்பை முஸ்லிம் சமூகத்திற்கு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |