வட மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் சபா குகதாஸ் விடுத்துள்ள கோரிக்கை
வட மாகாணத்தில் பாரிய வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, சுகாதார வசதிகளை வழங்குமாறு தமிழீழ விடுதலை இயக்க யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் (19.12.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தூய குடிநீர் வசதிகள்
குழந்தைகளுக்கு தேவையான உணவுகள், எல்லோருக்குமான சுகாதாரத்தை ஒரளவு உறுதி
செய்வதுடன் நுளம்புத் தொல்லையில் இருந்து பாதுகாப்பதற்கான உதவிகள் மற்றும் தொற்றா
நேயாளர்களுக்கான உதவிகள் மக்களுக்கு மிக முக்கியமானவை.
டெங்கு, வாந்திபேதி, வயிற்றோட்டம் போன்ற நோய்கள் விரைவாக பரவும் அபாயம் உள்ளதால் தூய குடிநீர் வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
ஆகவே தன்னார்வ அமைப்புக்கள், அறக்கட்டளைகள், கொடையாளர்கள் போன்றோர் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
