கொழும்பின் நேற்றைய போராட்டம்! கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலவரம்..
மக்கள் போராட்ட இயக்கத்தின் சார்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து கொழும்பு - கோட்டையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தின் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று(25.06.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
களமிறக்கப்பட்ட பொலிஸ் கலவரத் தடுப்புப் பிரிவு
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னர் வரை பேரணியாக செல்ல முற்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த பேரணியை பொலிஸார் தடுக்க முயற்சித்த பொழுது, இருத்தரப்பிற்கும் இடையில், கடும் வார்த்தைப் பிரயோகங்களும் அமைதியின்மையும் ஏற்ப்பட்டுள்ளது.
பொலிசாரின் உத்தரவுகளையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் பேரணி செல்ல முற்பட்டதால், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் கலவரத் தடுப்புப் பிரிவு வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.