கோட்டாபயவை ஆட்டங்காண வைத்துள்ள புலனாய்வுத் தகவல்
நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், நாடு முழுவதும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக புலனாய்வு பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியிலேயே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கும் முக்கிய காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருவதாக புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
மக்களின் அடிப்படை தேவையான உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உள்ள அழுத்தம் காரணமாக கடுமையான சமூக நெருக்கடி உருவாகி வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பணவீக்கம் வாழ்க்கை செலவுடன் ஒரே நேரத்தில் உயரும் போது, மக்களின் வாங்கும் திறன் குறைவடைவதனால் விரக்தி நிலை ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
