ஜனாதிபதியின் வீட்டிற்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்! வீட்டுக்குள் நடக்கும் காட்சியால் மகிழ்ச்சியில் மக்கள்(Video)
ஜனாதிபதியை பதவி விலக கோரி கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் வீட்டிற்குள் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
ஜனாதிபதியின் வீட்டு நுழைவாயிலை உடைத்தெறிந்த போராட்டக்காரர்கள் அவரை உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக இவ்வாறு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| வரலாற்றில் முதல் முறையாக பதிவான சம்பவம் - அவசர கூட்டத்திற்கு ரணில் அழைப்பு! நாடாளுமன்றத்தை கூட்டவும் கோரிக்கை |
| ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த அவசர கோரிக்கை |