புணானையில் போராட்டம் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வாக்குறுதியால் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள் (Photos)
மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்திற்குட்பட்ட புணானை கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவினை இணைப்பது தொடர்பான விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிரதேச மக்கள் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ், சிங்களம் என இரு தரப்பு மக்களும் இணைந்து இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
தாங்கள் வழக்கமாக கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தின் கீழ் தங்களது அரச நிர்வாக நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் நிர்வாக நடவடிக்கைக்குள் திடீர் என தங்கள் கிராமம் உள்வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தங்களுக்கு கவலையளிப்பதாக தெரிவித்தே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இருந்து காணி தொடர்பான எல்லை நிர்ணயக் குழுவொன்று இன்று காலை புணானை பிரதேசத்திற்கு சென்று எல்லை நிர்ணயம் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அறிந்த பிரதேச மக்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் (S.Viyalendiran) கவனத்திற்கு கொண்டு சென்றவுடன், போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தாங்கள் வாகரை பிரதேச செயலகத்துடன் இணைந்தே வாழப்போவதாகவும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் இணைந்து வாழ விருப்பமில்லை எனவும் இதனை தடுத்து நிறுத்தி தறுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,
குறித்த விடயம் தொடர்பாக தன்னால் இயன்ற உதவிகளை மேற்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபிஸ் நசிர் அஹமட் தெரிவிக்கும் காணி தொடர்பான புள்ளி விபர நடவடிக்கைகளை தாம் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
வாகரை பிரதேச செயலகம், கிரான் பிரதேச செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இஸ்லாமிய சகோதரர்கள் வாழ்ந்து வருவதாகவும், மக்களுக்கிடையில் இன முரண்பாட்டினை ஏற்பாடுத்தும் நடவடிக்கையில் எவரும் ஈடுபடக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.









தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
