ஓமானில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களை காப்பாற்ற வவுனியாவில் போராட்டம்! (video)
ஓமானில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட எமது பெண்களை காப்பாற்றுமாறு கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா இலுப்பையடி சந்தியில் இன்று (05.12.2022) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இவ் கவனயீர்ப்பு போராட்டத்தினை சமகி வனிதா பலவேகய அமைப்பினர் முன்னெடுத்திருந்தனர்.
கவனயீர்ப்பு போராட்டம்

போராட்டத்தினை தொடர்ந்து இலுப்பையடி சந்தியிலிருந்து நடைபயணமாக சென்ற போராட்டகாரர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வவுனியா காரியாலயத்தினை முற்றுகையிட்டதுடன் பணியகத்தின் பொறுப்பதிகாரியிடம் மகஜரும் கையளித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் ஜக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினி மற்றும் ஓமானில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்கள் , பொதுமக்கள் என பலரும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இலங்கை பெண்கள் பாலியல் அடிமைகளா? அனைத்தையும் விற்று ஏப்பமிட்டு இப்போது எமது பெண்களின் மானத்தையும் விற்கும் மானம் கெட்ட அரசு, ஓமானில் பாலியல் துன்புறுதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள எமது
பெண்களை காப்பாற்று போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri