நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முற்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்! பொலிஸாருடன் வாக்குவாதம் (Video)
கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்படுவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்திற்கு செல்லும் பிரதான வீதிக்கு அருகில் பத்தரமுல்ல வழியில் தற்போது குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டக்காரரர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் நுழையா வண்ணம் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.








சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri