உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை கைது செய்யக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் தொடர்புபட்ட சூத்திரதாரிகளை கைது செய்ய கோரி பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் மட்டு காந்தி பூங்காவின் முன்னால் இன்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் இடம்பெற்று 5 வருட நினைவு தினத்தையிட்டு கூத்திரதாரிகளை கைது செய்ய கோரி சமூக செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன் போது அரசே கொலையாளிகளை மறைக்காதே, குண்டுவெடிப்பின் கூத்திரதாரிகளை கைது செய், சர்வதேசமே மெனத்தை கலைத்து ஈஸ்ரர் குண்டுவெடிப்பின் நீதியை தார வேண்டும், 5 ஆண்டு கடந்தும் அவலத்துக்கு நீதி இல்லையா? போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷகள் எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
You May like this video
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam