26ஆவது வாரமாக தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்!
தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம், கொட்டும் மழை உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் இன்று(16.10.2026) 26ஆவது வாரமாகத் தொடர்ந்துள்ளது.
தமது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்காகத் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடிவரும் மயிலிட்டி மக்கள், தமது நீண்டகாலக் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
பூர்வீக மண்ணை மீளப் பெற
பல வாரங்களாகத் தொடரும் இப்போராட்டத்தின் மூலம் தமது காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனினும், தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், விரைவில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வருகை தரவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகையின்போது, 26 வாரங்களாகத் தொடரும் தமது போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் மயிலிட்டி மக்கள் காத்திருக்கின்றனர்.
தமது பூர்வீக மண்ணை மீளப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன், மயிலிட்டி மக்களின் போராட்டம் 26ஆவது வாரத்தையும் கடந்து தொடர்கின்றது.



திடீரென்று மாற்றப்பட்ட திட்டம்! நீதிமன்றத்தைத் தவிர்த்து புத்தசாசன அமைச்சை நோக்கி விரையும் பிக்குகள்