யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் (Photos)
யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப் போராட்டத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் வட மாகாண சபையின் மாகாண உறுப்பினர்கள் யாழ் மாவட்ட சிவில் சமூக மற்றும் கல்விமான்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நீதிகளின்; வெகுசனசிவில் சமூகத்தின் ஆதரவாளர்கள் என பலரும் இப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
யாழ். மாவட்ட சிவில் சமூக மற்றும் கல்விமான்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளின் வெகுசன சிவில் சமூகத்தின் எற்பாட்டில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்கள் பதவி விலக வலியூறுத்தி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து துவிச்சக்கரவண்டிகளின் போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்ட பேரணி யாழ். பரமேஸ்வராச்சந்தியில் இருந்து பலாலி வீதியூடாக சென்று அங்கு இருந்து ஆஸ்பத்திரிவீதியூடாக சென்று யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் சென்று நிறைவடைந்ததுடன் அங்கு கண்டபேரணி உரைகள் நிகழ்ந்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்- தீபன்
ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பதற்றம்! ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் - தீவிரமடையும் கொழும்பின் கள நிலைமை (Video) |








