யாழில் இந்திய துணைத் தூதரகம் முன்பாக வெடித்த போராட்டம்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக கடற்றொழிலாளர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (18.06.2024) காலை நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது, யாழ்ப்பாணம் சேன் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மருதடிச் சந்தியில் இருந்து துணைத் தூதரகம் வரை பேரணியாகச் சென்ற கடற்றொழிலாளர்கள், தூதரகம் முன்பாக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கையளிக்கப்பட்ட மனு
இதனைத் தொடர்ந்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் துணைத்தூதரகத்தில் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |