5 வருடங்கள் கடந்தும் இடமாற்றம் இல்லாமல் போாராடும் அதிகாரிகள் - திருகோணமலையில் வெடித்த போராட்டம்
திருகோணமலையில் பணியாற்றும் வெளிமாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இடமாற்றம் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டமானது, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நேற்று(21.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 வருடங்கள் கடந்தும்..
இதன்போது, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் திருகோணமலை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட தங்களுக்கு சுமார் 5 ஆண்டுகள் கடந்தும் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தாங்கள், குடும்பங்களை விட்டு விலகி பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றி வருவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
2027ஆம் ஆண்டுக்கான இடமாற்றப் பட்டியலில் தங்களை சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.