இலங்கையர்களால் நடுக்கடலில் தாக்கப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள்: தமிழகத்தில் போராட்டம்
இந்திய கடற்தொழிலாளர்கள் மீது நடுக்கடலில் வைத்து நேற்று முன்தினம் இலங்கையர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலை கண்டித்து இன்று(25.09.2023) தமிழகத்தின் நாகப்பட்டின மற்றும் இராமநாதபுர மாவட்ட கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு மாவட்டங்களில் கடற்தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக கடற்தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நாகப்பட்டின கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் சௌந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொருட்கள் அபகரிப்பு
இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீன்பிடி வலை, ஜி.பி.எஸ், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை அபகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறைக்கு அருகில் கடந்த சனிக்கிழமையன்று கடற்தொழில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மோட்டார் படகில் வந்த ஏழு பேர் நடுக்கடலில் தம்மை எதிர்கொண்டு உடமைகளைக் கோரியதாக பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
அதற்கு குறித்த கடற்தொழிலாளர்கள் மறுப்பு வெளியிட்டதை அடுத்து அவர்கள் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த மூன்று கடற்தொழிலாளர்கள் நாகப்பட்டினம் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, வேளாங்கண்ணி பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தாக்குதலில் இலங்கை அரசின் தொடர்பு குறித்து கடற்தொழிலாளர்கள் கடுமையாக சந்தேகிப்பதாக இந்திய தேசிய கடற்தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.எம்.பி.ராஜேந்திர நாட்டார் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
