முறிந்தது பாஜக - அதிமுக உறவு! வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
பாரதீய ஜனதா கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலக போவதாக அ.தி.மு.க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் முக்கிய தலைவரான கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் இன்று மாலை தெரிவித்தார்.
ஆத்திரமடையச் செய்த அண்ணாமலையின் செயல்
ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் அ.தி.மு.க.வும் அங்கம் வகித்தது.
கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் உரசல் நிலவி வந்த நிலையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி வந்த சில கருத்துக்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.
அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைமை பொறுப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க.வினர் பல கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் பா.ஜ.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே நிலவி வந்த உறவு முறிந்தது என அக்கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.






யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 21 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
