மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு ஆதரவாக போராட்டம்
மன்னாரில் மணல் அகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து குழு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் நேற்றையதினம் புதன்கிழமை (06.11.2024) காலை தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மன்னார் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட குழுவினர், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்கள் மேற்கொள்ள முடியாது என அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
எச்சரிக்கை
இருப்பினும், போராட்டக்காரர்கள் அங்கிருந்து அகன்று செல்லாததுடன் தேர்தல் உத்தியோகத்தகர்களுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, அரச சேவைக்கும் தேர்தல் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
