காணாமல் ஆக்கப்பட்டோரின் தலைவியை விடுதலை செய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பொலிஸாரின் அடாவடித்தனத்தை கண்டித்தும் கைது செய்யப்பட்ட வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவியை விடுதலை செய்யக்கோரியும் முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டமானது காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் இன்று (08.01.2024) காலை மேற்கொள்ளப்பட்டது.
பலர் பங்கேற்பு
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல கோஷங்களை எழுப்பியவாறும் போராடுபவர்களை கைது செய்வதுதான் ரணில் அரசின் நல்லிணக்கமா?, சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














