முல்லைத்தீவில் உணவுத்தவிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உணவுத்தவிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இலங்கையின் 73ஆவது சுதந்திர நாளான இன்று சுதந்திர தினத்தை புறக்கணித்து
கறுப்புக்கொடி ஏந்தியவாறு கவனயீர்ப்பு உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்தியுள்ளார்கள்.
சுதந்திர நாளினை கரிநாளாக நினைவிற்கொண்டு நீதி வேண்டி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “எங்களுக்கு ஆதரவு தரமுடியாத நிலையில் தடை உத்தரவு விதித்துள்ளார்கள்.
காலம் போகப்போக எங்களையும் கைது செய்வதற்கான சந்தர்ப்பத்தினை உருவாக்கியுள்ளார்கள்.
எங்கள் உறவுகளைத்தான் நாங்கள் தேடுகின்றோம், என் கணவரைத்தான் நான் தேடுகின்றேன்.
நீதிமன்ற தடை உத்தரவினை போடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களுக்கும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
இதற்கான நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றும் தெரிவித்துள்ளனர்.









தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 6 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
