யாழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம்
பட்டதாரி நியமனத்தில் உள்ளீர்க்கப்பட்டு பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலில் நடவடிக்கைகளி்ல் ஈடுபட்டு வருகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களை ஆசிரியர் சேவையில் இணைக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் வட க்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று (08) இடம்பெற்றது.
நாடு முழுவதிலுமுள்ள 18 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரிகளே இவ்வாறு மாவட்டம் தோறும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் பற்றாக்குறை
பல்கலைப் பட்டம் பெற்று தொழில் வாய்ப்புக்களுக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நாடுமுழுவதும் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த அவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டனர்.
அதன்காரணமாக இருவேறு நிலைகளில் தமது பதவியும் சேவையும் இருப்பதால் பல்வேறு இடர்பாடுகளை நாம் நாளாந்தம் எதிகொள்வதால் மனதளவிலும் பல்வேறு துயரங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே எமது கோரிக்கைக்கு தீர்வை கோரி நாம் இன்று வடக்கின் ஆளுனரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
முன்பதாக யாழ். மாவட்டசெயலகம் முன்பாக ஒன்றுகூடிய குறித்த ஆசிரியர்கள் வடக்கின் ஆளுனர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
ஆளுனர் சந்திப்புக்காக ஆசிரியர் சார்பில் மூவர் அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்ட நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் தான் அவதானம் செலுத்துவதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
