நுவரெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் பரபரப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்
நுவரெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் பொது மக்களும், சாரதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் இன்று (28) பரபரப்பு ஏற்பட்டது.
வாகனத்திற்கு தேவையான எரிபொருள் பெறுவதற்கு சாரதிகளும், மண்ணெண்ணெய் பெறுவதற்கு பொது மக்களும் இன்று காலை முதல் எரிபொருள் நிலையத்தை சூழ காத்திருந்தனர்.
எனினும், எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வாகன சாரதிகளும், மக்களும் எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் உள்ள சுற்றுவட்டத்தை மறைத்து சுமார் ஒரு மணித்தியாலயம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார் கடும் பிரேயத்தனத்திற்கு மத்தியில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதன்படி, எரிபொருள் வாங்குவதற்காக கொள்கலன்கள் எடுத்து வந்தவர்களுக்கு ஆயிரம்
ரூபாவுக்கும், வாகனங்களுக்கு 3500 ரூபாவும் டீசல் வழங்கப்பட்டது. அதேபோல பொது
மக்களுக்கு மாலை 6 மணிக்கு பிறகு மண்ணெண்ணெய் வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.





siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
