மட்டக்களப்பு - பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று (18.04.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாழுகாமத்திலுள்ள மூன்று பாடசாலைகளிலும் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு
குறுகிய காலத்தில் வலயத்தை முன்னேற்றிய கல்விப் பணிப்பாளர் எமக்கு வேண்டும் எனவும் அரச அதிகாரிகள் மீதான அரசியல் பழிவாங்கலை உடன் நிறுத்து, பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடான இடமாற்றத்தை வன்மையாக கண்டிக்கின்றோம், போன்ற பல வாசகங்கள் எழுதிய பாதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிவந்த சிவினந்தம் சிறிதரனை இடமாற்றம் செய்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மீண்டும் சி.சிறிதரனை பட்டிருப்பு வலயத்திற்கு கல்விப் பணிப்பாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.
கிழக்குமாகாண ஆளுனர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் கவனத்தை ஈர்த்து இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |













விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
