கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்...! முடக்கப்பட்டுள்ள வீதிப் போக்குவரத்து: பலர் கைது
கொழும்பில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார நுகர்வோர் சங்கம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அத்துடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - திவுலப்பிட்டி பிரதான வீதி ஹொரகஸ்முல்ல பிரதேசத்தில் முற்றாக தடைப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் மற்றும் பௌத்த பிக்கு உட்பட 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் கைது
பேரணியின் ஆரம்பத்தில் பேரணியை நடத்தக் கூடாது என பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், கலவரமாக நடந்து கொண்ட மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட குழுவினரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், தற்போது திவுலபிட்டிய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
