உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணையை திசைத்திருப்ப முயற்சிக்கும் தேரர்கள் - வெடித்த போராட்டம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதிக் கோரி மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டமானது, இன்று(18.06.2026) மட்டக்களப்பு - காந்திப் பூங்காவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அத்துடன், கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு மக்களின் பரிந்துரைகள்
நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுக்கின்ற இந்த சமயத்தில், காவி உடை போர்த்திய மதத்தலைவர்கள் மற்றும் முன்னாள் அரசியல் தலைவர்கள் வழக்கை திசைத்திருப்ப முயற்சிக்கிறார்கள்.

எக்காரணம் கொண்டும், இதனை அரசு கருத்திற் கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வுப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
அதே சமயம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு உதவிய நாடுகள் மற்றும் அரசாங்கம் கண்டறியப்பட்டு, உண்மைகளை சட்டத்தின் முன் வெளிக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டக்காரரங்கள் இதன்போது முன்வைத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


