மட்டக்களப்பில் நகர்ப்பகுதிக்குள் படையெடுத்த நூற்றுக்கணக்கான உழவு இயந்திரங்கள், மோட்டார்சைக்கிள்கள்(VIDEO)
வவுணதீவு மற்றும் ஆயித்தியமலை பகுதி விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்ட உழவு இயந்திரங்களிலும், மோட்டார்சைக்கிள்களிலும் மட்டக்களப்பு நகர் நோக்கி பவணியாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கம் பசளையை வழங்க வேண்டும் என கோரி இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகருக்குள் நுழைய முற்பட்ட குறித்த பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்தி, குறித்த உழவு இயந்திரங்களை மட்டக்களப்பு நகருக்குள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துள்ளனர்.
எனினும், “தம்மை உள்ளே செல்லவிடாது மறுத்தால் தாம் வீதியை மறித்து போராட்டம் மேற்கொள்வதாகவும், தம்மை உள்ளே செல்ல விட்டால் வீதியில் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறையும் ஏற்படுத்தாமல் தமது போராட்டத்தை முன்னெடுப்பதாகவும்” போராட்டக்காரர்கள் உறுதியளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு பொலிஸாரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அமைதியான முறையில் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு காந்திபூங்கா வரையில் ஊர்வலமாக வந்து பின்னர் மத்திய வீதியூடாக வாவிக்கரை வீதியை சென்றடைந்து அங்கிருந்து மாவட்ட செயலகம் வரையில் பேரணியானது சென்றுள்ளது.
மாவட்ட செயலகத்தின் வாயிற்கதவை பொலிஸார் பேருந்து கொண்டு மறித்தபோது அதற்கு எதிராக விவசாயிகள் கடுமையான ஆட்சேபனையினை தெரிவித்ததுடன், குறித்த பேருந்தை அகற்றாவிட்டால் குறித்த பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கப்போவதாகவும் விவசாயிகள் எச்சரித்ததை தொடர்ந்து குறித்த பேருந்து அங்கிருந்து அகற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து பொலிஸார் மாவட்ட செயலகத்திற்குள் செல்வதை தடுத்த போதும் முன்வாசல் ஊடாக மாவட்ட செயலக வாசல் வரையில் விவசாயிகள் கோசங்களை எழுப்பியவாறு சென்றபோதிலும் மாவட்ட செயலக உள்வாசல் கதவினை பூட்டி பொலிஸார் விவசாயிகள் உள் நுழைவதை தடுத்துள்ளனர்.
இதன்போது மாவட்ட செயலகத்திற்குள் யாரும் உள்நுழைய முடியாதவாறு வாயிற்கதவினை முற்றுகையிட்டு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் இந்த முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் மகஜரையும் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
முற்றுமுழுதாக சேதனப்பசளை திட்டம் என்பதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் 50வீதம் சேதனப்பசளையினை வழங்கினால் 50வீதம் யூரியாவினை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
சேதனப்பசளை திட்டத்தினை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால் முழு நிலத்திலும்
சேதனப்பசளை செய்கை செய்யமுடியாது.அவ்வாறான நிலங்களுக்குகு யூரியாவினை வழங்க
அரசாங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.




பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
