ட்ரம்ப் - மஸ்க் கூட்டணிக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்!
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், மற்றும் எலன் மஸ்குக்கு எதிராக பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப், மற்றும் மஸ்க் கூட்டினைவால் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு எதிராக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மூன்றாம் திங்கள் அமெரிக்காவில் “பிரசிடெண்ட்ஸ் டே” கொண்டாடப்படுகிறது.
Wow. Thousands of Americans are rallying outside the Capitol to protest Elon Musk and Donald Trump’s destruction of the US government.
— No Lie with Brian Tyler Cohen (@NoLieWithBTC) February 17, 2025
We need more of this.
(video per @PenguinSix)pic.twitter.com/IIqbwVl7YC
ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
இந்நிலையில் குறித்த தினத்தில் நாடு முழுவதும் விடுமுறை என்பதால், அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்தவர்களை நினைவுகூர்ந்து மக்கள் நன்றி செலுத்துவர்.
எனினும் இந்த ஆண்டுபிரசிடெண்ட்ஸ் டே நிகழ்வில் ட்ரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
50501 என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு
இந்த இயக்கத்துக்கு 50 ஆர்ப்பாட்டங்கள், 50 மாநிலங்கள், 1 இயக்கம் என்று பொருள்.
கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் வொஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ட்ரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியிருந்தனர்.
மேலும் ஃப்ளோரிடா மற்றும் கலிஃபோர்னியா மாகாணங்களிலும் பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |