அமெரிக்காவின் சமாதான ஒப்பந்த திட்டத்திற்கு சவாலாகும் ஜெலென்ஸ்கியின் அறிவிப்பு
உக்ரைன் இல்லாமல் எட்டப்படும் எந்தவொரு சமாதான ஒப்பந்தத்தையும் தனது நாடு ஏற்காது என அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் ஒருதலைபட்சமாக மேற்கொள்ளப்படும் எந்த திட்டத்தினாலும், தமது பகுதியை உக்ரைன் விட்டுக்கொடுக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைதியை விரும்பவில்லை
தொடர்ந்து உரையாற்றிய அவர், “ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு பொய்யர். அவர் அமைதியை விரும்பவில்லை.
உக்ரைனுக்கு அப்பால் துருப்புக்களை அனுப்புவதற்கான திட்டங்களைக் புடின் வகுத்து வருகின்றார்.
இந்நிலையில் இருதரப்பு போர் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த, ட்ரம்ப் நிர்வாகத்தில் உள்ள மூன்று உயர் வெளியுறவுக் கொள்கை உதவியாளர்கள் இந்த வாரம் சவுதி அரேபியாவில் ரஷ்ய அதிகாரிகளைச் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இது போர் குறித்து அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையேயான முதல் கணிசமான பேச்சுவார்த்தையாகும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |