இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி போராட்டம்
இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள அனலைதீவு கடற்றொழிலாளர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி யாழ். ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்து.
கடந்த 10/06/2024 திகதியன்று யாழ். அனலைதீவு கடற்பரப்பில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள், கடல் சீற்றம் காரணமாக தமிழகம் ஆர்காட்டுத்துறையில் கரையொதுங்கி தற்போது திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி இரண்டு கடற்றொழிலாளர்களையும் விடுவிக்கக் கோரி ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் முன்பாக அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அனலைதீவு கடற்றொழிலாளர்கள் இணைந்து நேற்று (10.06.2024) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கையளிக்கப்பட்ட மனு
அனலைதீவைச் சேர்ந்த நாகலிங்கம் விஐயகுமார், திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ ஆகிய கடற்றொழிலாளர்களே திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய போராட்டத்தின் இறுதியில் போராட்டக்காரர்களால் ஊர்காவற்றுறைப் பிரதேச செயலாளர் மஞ்சுளாதேவி சதீசனிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |