இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
ஒரு லட்சத்து 75,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 6ஆம் திகதி இந்த திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
திறைசேரி உண்டியல்கள் ஏலவிற்பனை
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 85,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.
மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்... வெளிவந்த விவரம் Cineulagam