அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வடக்கு, கிழக்கு மக்களும் பங்கேற்பு : திஸ்ஸ அத்தநாயக்க
"பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அரசுக்கு எதிராக கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களும் பங்கேற்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"நாட்டில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதி நிலைமை பற்றி எதுவும் சரியாக தெரியவருவதில்லை. நிதி அமைச்சர் நம்பிக்கை இழந்து வருகின்றார்.
பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றது. எனவே, இந்த அரசுக்கு மக்களின் எதிர்ப்பைக் காட்டும் வகையில் இன்று கொழும்பில் மாபெரும் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.
நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள். குறிப்பாக வடக்கு, கிழக்கில் இருந்தும் கொழும்பு நோக்கி வந்து, தமது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்துவார்கள் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
எதிர்க்கட்சித் தலைவர் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பு
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam