தமிழ் இளையோர் அமைப்பினால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்(Video)
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியால் பெரும் அசௌகரியங்களையும், சொல்ல முடியாத துன்பங்களையும் எமது மக்கள் அனுபவித்து வருகின்றார்கள் என தமிழ் இளையோர் அமைப்பின் பணிப்பாளரும் மனித உரிமைகள் செயற்பட்டாளருமான ஜீவரெத்தினம் தவேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் வடகிழக்கு மக்களையும் இளைய தலைமுறையினரையும் ஊழல்வாதிகளுக்கு பின்னால் அடகுவைத்து பிழைப்பு நடாத்தியர்களை கண்டிகின்றோம் என்னும் தலைப்பிலே நேற்று(17) காலை இந்த ஆர்ப்பாட்டம் தமிழ் இளையோர் அமைப்பினால் நடாத்தப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாபெரும் கண்டனம்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ராஜபக்ச குடும்ப ஊழல் வாதிகளுக்கு பின்னால் அடகு வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் வடக்கு - கிழக்கில் பலர் உள்ளனர். மக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் அவர்களை மிக வண்மையாக கண்டிக்கின்றோம்.
எமது மக்களை இந்த அவலநிலையில் இருந்து காப்பாற்றுவதற்காகவும், பெரும் இழப்புகளை தவிர்த்து கொள்வதற்காகவும் பல வழிகளிலும் முயற்சி செய்து வருகின்றோம் என்பதை எமது மக்களுக்கு தெரியப்படுத்தி நிற்கின்றோம்.
இந்த நாட்டை கொள்ளையடித்த ஊழல்வாதிகளுக்கு ஆதரவளித்து கொண்டு எமது மக்களை துண்டாடி, இளையோர்களை கூறுபோட்டு, எமது சமூகத்தை மலினப்படுத்திபிழைப்பு நடத்தியவர்கள் பலர் உள்ளனர்.
மக்களை கேள்விக்கு உட்படுத்தியதோடு இளைய தலைமுறையினரையும் ஊழல்வாதிகளுக்கு பின்னால் திசைத்திருப்பி எமது சமூக தன்மானத்தை இழிவுபடுத்தி கேள்விக்குள்ளாக்கியதை வன்மையாக கண்டிக்கின்றோம்”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பலரும் பங்களிப்பு அளித்துள்ளனர்
ஜீவரெத்தினம் தவேஸ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
வடக்கு-கிழக்கு ஊழல் வாதிகளுக்கு எதிராக மாபெரும் கண்டன அமைதிவழி ஆர்ப்பாட்டம்: தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் |