வடக்கு-கிழக்கு ஊழல் வாதிகளுக்கு எதிராக மாபெரும் கண்டன அமைதிவழி ஆர்ப்பாட்டம்: தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்

Sri Lankan Tamils Sri Lankan protests Sri Lanka
By Jenitha Jul 16, 2022 11:30 AM GMT
Report

"ராஜபக்ச குடும்ப ஊழல் வாதிகளுக்கு பின்னால் அடகு வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் வடக்கு- கிழக்கில் பலர் உள்ளனர் எனவும் மக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் அவர்களை மிக வண்மையாக கண்டிக்கின்றோம்" என தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'அது மாத்திரம் அன்றி இவ்வாறானவர்களை கண்டணத்திற்குள்ளாக்கும் வகையில் நாளை (17) காலை 09. 30 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் மாபெரும் கண்டன அமைதிவழி ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் ஒழுங்கு செய்து உள்ளது" என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

“தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியால் பெரும் அசௌகரியங்களையும், சொல்ல முடியாத துன்பங்களையும் எமது மக்கள் அனுபவித்து வருகின்றார்கள் என்பதை நினைத்து தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினர் மக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் வேதனையும், விரக்தியும் அடைந்திருக்கின்றோம்.

எமது மக்களை இந்த அவல நிலையில் இருந்து காப்பாற்றுவதற்காகவும், பெரும் இழப்புகளை தவிர்த்துக் கொள்வதற்காகவும் பல வழிகளிலும் முயற்சி செய்து வருகின்றோம் என்பதை எமது மக்களுக்கு தெரியப்படுத்தி நிற்கின்றோம்.

வடக்கு-கிழக்கு ஊழல் வாதிகளுக்கு எதிராக மாபெரும் கண்டன அமைதிவழி ஆர்ப்பாட்டம்: தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் | North East Politician In Sri Lanka Protest

இந்த பெரும் பொருளாதார நெருக்கடியால் முழு இலங்கை நாடும் பாதிப்புக்குள்ளாகி மீண்டு வருவதற்கு வழியின்றி தவிர்த்துக் கொண்டிருக்கின்றது.

இந்த அவல நிலைக்கு காரணமாக இருந்தவர்கள் ராஜபக்ச குடும்ப ஊழல்வாதிகள் என்பதை முழு நாட்டு மக்களும் அறிந்து அவர்களுக்கெதிரான மக்கள் எழுச்சி இளையோர் போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை எமது மக்கள் அறிவீர்கள்.

வடக்கு-கிழக்கு ஊழல்வாதிகள்

வடக்கு-கிழக்கு ஊழல் வாதிகளுக்கு எதிராக மாபெரும் கண்டன அமைதிவழி ஆர்ப்பாட்டம்: தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் | North East Politician In Sri Lanka Protest

இந்த நாட்டை கொள்ளையடித்த ஊழல்வாதிகளுக்கு ஆதரவளித்துக் கொண்டு எமது மக்களை துண்டாடி , இளையோர்களை கூறுபோட்டு, எமது சமூகத்தை மலினப்படுத்தி ராஜபக்ச குடும்ப ஊழல் வாதிகளுக்கு பின்னால் அடகு வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் வடக்கு- கிழக்கில் பலர் உள்ளனர்.

எனவே இவர்களை கேள்விக்கு உட்படுத்தி நிற்பதோடு எமது மக்களையும், இளைய தலைமுறையினரையும் ஊழல்வாதிகளுக்கு பின்னால் திசைதிருப்பி எமது சமூக தன்மானத்தை இழிவுபடுத்தி கேள்விக்குள்ளாக்கியதை மக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் மிக வண்மையாக கண்டிக்கின்றோம்.

ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

அது மாத்திரம் அன்றி இவ்வாறானவர்களை கண்டணத்திற்குள்ளாக்கும் வகையில் எதிர்வரும் 17/07/2022 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் மாபெரும் கண்டன அமைதிவழி ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் ஒழுங்கு செய்து உள்ளது.

எனவே வடக்கு,கிழக்கில் பிரதிநிதிப்படுத்துகின்ற எமது மக்கள், இளையோர்கள், பொது அமைப்புக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவளிப்பதோடு எமது எதிர்கால தலைமுறையினருக்கான சமூகத்தை வலுப்படுத்தி நிற்குமாறு தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் உரிமையோடு அழைப்பு விடுக்கின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.     

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US