முல்லைத்தீவில் ஆறாவது நாளாக தொடரும் போராட்டம் - ஆளுநருக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணி உரிமையாளர்கள் ஆறாவது நாளாக இன்று(29.06.2026) போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்குரிய 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக்காணிகளும், 4 குடும்பங்களுக்குரிய 100ஏக்கர் மத்தியவகுப்புக் காணிகளும், 3 குடும்பங்களுக்குரிய 11.5 ஏக்கர் தோட்டக்காணிகளுமாக 171 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மக்கள் பூர்வீக வாழ்விடமாக கொண்ட 55.5 ஏக்கர் காணியை முதற்கட்டமாக உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தே தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
காணிகளை கோரி தொடர் போராட்டம்
இதன்போது, போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கேப்புலவு பூர்வீக மக்களாகிய நாம் உண்மைக்கு புறம்பான தகவலை முன்னிட்டு வடமாகாண ஆளுநருக்கு கோரிக்கையை முன்வைத்து இதுவரையும் சாதகமான பதில்கள் எவையும் எட்டவில்லை. எங்களுடைய வாழ்க்கை, வாழ்க்கையே போராட்டம், போராட்டமே வாழ்க்கை என்ற நிலைக்கு உள்ளாகியிருக்கின்றோம்.

இனியும் இந்த போராட்டத்தை நீண்ட நாட்களாக வீதியில் இருந்தோ அல்லது மனு வழியாகவோ மேற்கொள்ளாது மிக குறுகிய காலத்திலே எங்களுடைய போராட்டத்தை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளோம்.
ஆளுநரிடம் நாங்கள் விடுத்த கோரிக்கை, இராணுவத்தினால் எங்களிடம் முன்வைக்கப்பட்ட அநீதியான கோரிக்கைகளுக்கு தீர்ப்பு வழங்கி எங்களுடைய காணிகளை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகும்.
இதன் காரணமாக, உடனடியாக சாதகமான பதில் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம் இதுவரையும் முடிவில்லை.
இனி எங்களுடைய முடிவு ஆளுநர் இங்கு வரவில்லை அல்லது சாதகமான முடிவு தரவில்லை என்றால் நாங்கள் ஆளுநர் செயலகம் சென்று செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட எழுச்சி பேரணியை மேற்கொள்வதாக தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.



பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri