கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனப் பெண் தொழிலதிபர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்குள் கடத்தி வர முயன்ற சீன நாட்டைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (29.6.2026) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உள்வருகை முனையத்தில் பசுமை வழி (கிரீன் சேனல்) ஊடாக வெளியேற முயன்ற சீனப் பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கைது
அதன் பின்னர் குறித்த சீனப் பெண்ணைச் சோதனையிட்டபோது அவரின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 28,000 சிகரெட்டுகள் அடங்கிய 140 பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 42 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சீன நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவர் சீனாவின் குன்மிங் நகரிலிருந்து சைனா ஈஸ்டர்ன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri