பொலன்னறுவை மாவட்டத்தை உலகின் சிறந்த யானைகள் காட்சிப் பிரதேசமாக மாற்ற நடவடிக்கை
பொலன்னறுவை மாவட்டத்தை உலகின் சிறந்த காட்டு யானைகள் காட்சிப் பிரதேசமாகமாகவும், சுற்றுலா மையமாகவும் மாற்றுவதே தனது முதன்மை இலக்காகும் என்று பிரதியமைச்சர் டீ.பி. சரத் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொலன்னறுவையின் வரலாற்றுப் பாரம்பரியம், இயற்கை அழகு மற்றும் தனித்துவமான சுற்றாடல் கட்டமைப்பை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமொன்றாக மாற்ற முடியும்.
சுற்றுலா மையம்
குறிப்பாக, சில காலமாக இப்பகுதி மக்களுக்குப் பிரச்சினையாக இருந்து வரும் காட்டு யானைகளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்கக்கூடிய ஒரு முக்கிய வளமாகப் பயன்படுத்த முடியும்.

நாங்கள் பொலன்னறுவையை ஒரு சுற்றுலா மையமாக மாற்ற விரும்புகிறோம். இங்குள்ள இயற்கை அழகு, மக்களின் திறமைகள் மற்றும் வரலாற்று பாரம்பரியங்களை நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நமக்கு எப்போதுமே ஒரு பிரச்சினையாக இருந்து வரும் காட்டு யானைகளைப் பயன்படுத்தி, பொலன்னறுவையை உலகின் சிறந்த யானை காட்சிப் பிரதேசமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தலாம்.
பொருளாதார நடவடிக்கை
இந்த அபிவிருத்திச் செயல்முறையின் மூலம், பொலன்னறுவையை அதன் தற்போதைய நிலையை விட உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்து, பிரதேச மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.

இதற்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு இன்றியமையாதது என்றும் பிரதியமைச்சர் டீ.பி.சரத் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam