கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் முன்னெடுப்பு
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று (30) கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் காலை 10மணி முதல் அரை மணித்தியாலங்கள் வரை முன்னெடுக்கப்பட்டது.
பூரண ஆதரவு
இதன்போது சர்வதேச நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறும் தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு சர்வதேச நீதி தேவை என்றும் பொது வேட்பாளராக சரியான ஒருவரை நியமித்தால் தாம் பூரண ஆதரவு வழங்குவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோ.கனகரஞ்சி தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 9 மணி நேரம் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
