யாழில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்க கோரி போராட்டம்
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் (Jaffna) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று (29.04.2024) காலை இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 'ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை ஏமாற்றாதே, 'வேண்டும் வேண்டும் வேலை வேண்டும்', 'நாசம் நாசம் கனவுகள் நாசம்' உள்ளிட்ட பல்வேறு கோசங்களை பட்டதாரிகள் எழுப்பியிருந்தனர்.
ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மனு
இதனைத் தொடர்ந்து, நீண்ட காலமாக வேலையில்லாமல் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டியும் தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மனு ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.

அதேவேளை, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல்வாதிகளுக்கும் அந்த மனுவின் பிரதிகளை அனுப்பி வைக்க உள்ளதாகப் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமெனவும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடாத்த உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam