கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்குள் அத்துமீறி பிக்குகள் அடாவடி!
கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த பிக்குகள், திருகோணமலை - நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாண பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கடும் தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது அனுமதி வழங்கவில்லை என்றால் தாம் தீக்குளித்து இறப்பதற்கும் தயாராகவுள்ளதாக பிக்குகள் ஆளுநரை மிரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மூன்றாம் இணைப்பு
திருகோணமலை - நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் பிரதேச செயலகத்தில், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களால் இக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப்பணிகளும் முன்னெடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி - முபாரக்
இரண்டாம் இணைப்பு
திருகோணமலை - இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொருலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் மற்றும் சில பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று (28.08.2023) ஏ6 பிரதான வீதியை வழிமறித்து கிழக்கு ஆளுநருக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் குறித்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இடைநிறுத்தப்பட்ட கட்டுமானங்கள்
இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்று வந்தநிலையில் இது தொடர்பாகவும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிராக தமிழ் மக்களினால் முன்வைத்த
கோரிக்கையை பரிசீலித்த கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஜனாதிபதியினால்
அப்பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையின் கட்டுமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
காலாகாலமாக தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிக்குள் விகாரை அமைதால் அது இன முறுகலை ஏற்படுத்தும் என்ற வகையிலும், இன நல்லிணக்கத்தை பாதிக்கும் என்ற வகையிலும் தமிழ் மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டதன் காரணத்தினாலேயே விகாரையின் கட்டுமானங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
