நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கும் எதிர்க்கட்சி
நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கப்பதற்கு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
இந்த விவாதம் நடத்தப்படும் அமர்வுகளை புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இறுதி தீர்மானம்
அரசாங்கம், நிவாரணங்களை வழங்காத உடன்படிக்கை பற்றி பேசுவது நகைப்பிற்குரியது என நாடாளுமன்றில் அறிவித்து விட்டு, அமர்வுகளை புறக்கணிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு இறுதித் தீர்மானம் எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி நடத்தப்படவிருந்தது.
எனினும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி விவாதம் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிலையியற் கட்டளையின் 16ஆம் கட்டளைக்கு அமைவாக பிரதமரின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
