நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டத்தை நடத்தவுள்ளவுள்ளதாக தகவல்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக் கோரியும், மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள்ளே மாபெரும் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்தில் நாளை குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீதிக்கு இறங்கி போராடும் மக்கள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக் கோரியும், மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே நாளை
நாடாளுமன்றத்திற்குள்ளும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக எதிர்க்கட்சிகள்
தெரிவித்துள்ளன.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri
