புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி நுவரெலியாவில் போராட்டம்
புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இன்று (20) முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா பிரதேசத்தில் 2026ஆம் ஆண்டில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
வலியுறுத்தப்பட்ட விடயம்
சர்ச்சைக்குரிய ஆங்கிலப் பாட கற்றல் தொகுதியை தவிர, ஏனைய பாடங்கள் தொடர்பான கற்றல் தொகுதிகளை காலம் கடத்தாமல் மாணவர்களுக்குக் உடனடியாக கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
மேலும் எதிர்வரும் நாட்களில் இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால் பாடசாலை மாணவர்களையும் வீதிற்கு வரவழைத்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



