ரிஷாத் வீட்டில் சிறுமி உயிரிழப்பு - வீதிக்கு இறங்கிய மக்கள்
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய போது, எரிகாயங்களுடன் உயிரிழந்த 16 வயது சிறுமிக்கு நியாயம் கோரி டயகமவில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டயகம தோட்ட தொழிலாளர்கள் டயகம நகரில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதற்கு முன்னரும் இதுபோன்ற பல சம்பவங்கள் பெருந்தோட்டங்களில் இடம்பெற்றுள்ள நிலையில் அவற்றுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்களை இவ்வாறு தொழிலுக்கு அமர்ந்துவோர் தொடர்பில் கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்கு தகுந்த தண்டணை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
டயகம பகுதியில் உள்ள பல தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதுடன், உயிரிழந்த 16 வயது சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் தராதரம் பாராது கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.





பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
