ஹமாஸ் போரின் எதிரொலி: இஸ்ரேலில் வலுக்கும் போராட்டம்!
ஹமாஸ்க்கு(Hamas) எதிரான போரை இஸ்ரேல்(Israel) தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், அந்நாட்டில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) பதவி விலகக் கோரியும், முன்கூட்டியே நாட்டில் தேர்தல் நடத்தக் கோரியும் பொது மக்கள் குறித்த தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெலி அவிவ் பகுதியில் திரண்ட மக்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலகக் கோரியும், பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட ஹமாஸ் மக்களவை விடுவிக்கக் கோரியும் இஸ்ரேல் மக்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிஸார் மீது தாக்குதல்
அரசுக்கு எதிரான பதாகைகளை சுமந்து கொண்டு சென்ற மக்களுக்கும், பொலிஸாருக்கும், இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் தாக்குதலை ஆரம்பித்திருந்தது.
2023 ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி, ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஏறக்குறைய 250 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களில் 130 பேர் இன்னும் காசாவில் இருப்பதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுவிக்கப்பட்டவர்களில் 33 பேர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன்படி ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகு காசாவில் மோதல் தீவிரமடைந்து காணப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
