பெரிய பண்டிவிரிச்சான் போராட்டத்திற்கு எதிராக மக்கள் கண்டன ஊர்வலம்
மன்னார் - மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராம மக்கள் நேற்றைய தினம் கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டதோடு, மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மடு உதவி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.
மடு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த மாதம் 25 ஆம் திகதி குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு எதிராக குறித்த ஊர்வலம் இடம் பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கடந்த 30 வருடமாக மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் மோட்டை பகுதியில் 27 குடும்பங்கள் விவசாய செய்கையை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை முன்னோக்கி வந்த நிலையில், குறித்த மக்களின் பராமரிப்பில் இருந்த 50 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியை அமைப்பு ஒன்றுக்கு வழங்குவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்து கடந்த மாதம் 25ஆம் திகதி குழு ஒன்றினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு,பின்னர் குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த குழுவினரின் செயற்பாட்டை கண்டித்து இன்றைய தினம் பெரிய பண்டிவிரிச்சான் கிராம மக்கள் கண்டன ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்து மடு பிரதேச செயலகத்தை சென்றடைந்தனர்.
பின்னர் தமது பிரச்சினைகளை மடு உதவி பிரதேச செயலாளரிடம் தெரியப்படுத்தி மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிக்கும் வகையில் உதவி பிரதேசச் செயலாளரிடம் மகஜரை கையளித்தனர்.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த மாதம் 25 ஆம் திகதி மடு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சிறு குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக பெரிய பண்டிவிரிச்சான் கிராம மக்களாகிய நாங்கள் மிகவும் வேதனை அடைகின்றோம்.
எமது முன்னோர்களின் கூற்றுக்கிணங்கவும்,எமக்கு அறிவுக்கு எட்டிய வகையிலும் இன்று வரை கோயில் மோட்டை காணியானது மடு தேவாலய பரிபாலகரின் பரிபாலனத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
மேற்படி ஆர்ப்பாட்டமானது பெரிய பண்டிவிரிச்சான் கிராம மக்கள் மத்தியில் மன வேதனையையும், குழப்பங்களையும், பிரிவினைகளையும் ஏற்படுத்தி உள்ளது என்பதனை அறிகின்றோம்.
இக்காணியை மடுப்பரிபாலகருக்கு வழங்க வேண்டும் என கேட்டு நிற்கின்றோம்.எதிர்வரும் காலங்களில் தனிப்பட்ட குழுவினருக்கு அக்காணி பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் எமது கிராம மக்கள் மத்தியில் பாரிய குழப்பங்களும்,பிரிவினைகளும் ஏற்படும்.
எனவே,எமது கிராமத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சிறு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை எமது கிராம மக்கள் சார்பாக கண்டிக்கின்றோம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.










தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
