அவிசாவளை இளைஞன் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம்
அவிசாவளை எலிஸ்டன் தோட்ட இளைஞன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பிரதேச மக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வைக்காதே, வைக்காதே ஆலயத்தின் மீது கால் வைக்காதே, அடிக்காதே அடிக்காதே தொழிலாளர்களை அடிக்காதே போன்ற கோஷங்களையிட்டும் பதாதைகளையும் ஏந்தியவாறும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அவிசாவளை எலிஸ்டன் தோட்ட மேல் பிரிவு இளைஞர் மீது தோட்ட கள உத்தியோகஸ்தர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சட்ட நடவடிக்கை
சம்பவம் நடைபெற்ற தினத்திலிருந்து கட்டம் கட்டமாக பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டு உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் வேண்டுகோளுக்கிணங்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மேலும் தோட்ட கள உத்தியோகத்தர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாக்குதலுக்குள்ளான இளைஞரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கை
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் பணிப்புரையின் பேரில் பிரதி அமைச்சரின் பிரதநிதிகள் சீதாவக்கை பிரதேச சபை உறுப்பினர்களான பிரேம நாத் ஜெயரத்தின, பாலித்த பாலசூரிய, விஜயகுமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கமல் ஆகியோர் இன்றைய தினம் எலிஸ்டன் தோட்ட மேல் பிரிவிற்கு சென்றிருந்தனர்.
இந்தநிலையில், தோட்ட மக்கள் அவ்விடத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தை அகற்றக் கோரியும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் தோட்டப்புறங்களில் இடம்பெறக்கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பிரதி அமைச்சர் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு சாதகமான கருத்துக்களையும் அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையிணையும் வெளிப்படுத்தி இருந்ததோடு அம்மக்களின் கோரிக்கைகளை அமைச்சின் பிரதிநிதிகளுக்கு கையளித்திருந்ததோடு அவ் கோரிக்கைகள் அமைச்சர் அவர்களின் அவதானத்திற்கு பிரதிநிதிகளால் கொண்டு செல்லப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri