தையிட்டி போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஆதரவு
தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று ஆரம்பமாகும் போராட்டத்துக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
யாழ். தையிட்டியில் பொதுமக்களின் காணிகளுக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக இன்று மாலை போராட்டம் ஆரம்பமாகின்றது.
அந்த விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தி இருக்கின்றன.
பெருகும் ஆதரவு
இந்நிலையில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கமும் தமது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாக சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
"தமிழ் மக்கள் தமது ஒவ்வொரு பிரச்சினைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிக் கொண்டே வருகின்றனர். அந்தவகையில் தமது காணியை விடுவிக்க கோரி மக்கள் பாரிய போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆகையினால் இந்தப் போராட்டத்தில் கட்சி பேதங்களை விடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் அணிதிரள வேண்டும்." என்றும் அவர் அறிக்கை ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
